சித்ரா மரணத்தில் மர்மம்... விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை

சித்ராவின் மரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் முல்லையாக பிரபலமான நடிகை சித்ரா சமீபத்தில் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் கணவர் ஹேமந்த் மீது குற்றம் சாட்டப்பட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் மரணம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபுணர் குழு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. நீண்ட மாதங்களாகியும் சித்ராவின் மரணம் மர்மமாகவே உள்ள நிலையில் வரதட்சணை கொடுமை இல்லை, ஆனால் வேறு ஏதோ காரணம் உள்ளது என ஆர்டிஓ விசாரணையில் கூறப்பட்டது.

இதற்கிடையில் ஹேமந்த் தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

மேலும் இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்படவுள்ளதாகவும், சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

From around the web