"இசைஞானி"க்கு தன் பாடலால் வாழ்த்துக் கூறிய "சின்னகுயில் சித்ரா"!!

இளையராஜாவின் 78வது பிறந்தநாளுக்கு அனைத்து திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
chitra

80,90களில் தமிழ் சினிமாவை தன் இசையினால் கட்டி வைத்துள்ளார் இசைஞானி என்று அழைக்கப்படுகிற இளையராஜா. மேலும் இவரது இசைக்கு அன்றெல்லாம் மட்டுமின்றி இன்றும் பலரும் பல ரசிகர்கள் காணப்படுகின்றனர். பல நட்சத்திரங்களுக்கு தனது இசையினால்  படங்களை மிகப் பெரிய வெற்றியடைய வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய இளையராஜாவுக்கு இன்றைய தினம் 78வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. மேலும் அவருக்கு திரையுலகினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.chitra

மேலும் பலரும் அவருக்கு பாடல் மூலம் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் சின்ன குயில் என்று அழைக்கப்படுபவர் சித்ரா. மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். மேலும் அதில் அவர் கூறியுள்ளார் எனக்கு தந்தையாகவும் குருவாகவும் இருப்பவர் இளையராஜா என்று சின்னக்குயில் சித்ரா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் இசையில் வெளியான 1990 ஆம் ஆண்டு வெளியான கிழக்கு வாசல் என்ற திரைப்படத்தில் சின்ன குயில் சித்ரா பாடல் ஒன்று பாடியிருந்தார்.

அந்த பாடலை மீண்டும் அவருக்காக பாடி தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் சின்னக்குயில் சித்ராவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இசைஞானி இளையராஜாவுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக மாரி 2 என்ற திரைப்படத்தில் ஒரு பாடல் ஒன்று பாடி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web