ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு முதல்வர் ஈபிஎஸ் இரங்கல்

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் அவர்களின் தாயார் கரிமா பேகம் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் தங்களுடைய டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டரில், ‘இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும்
@arrahman அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்! என்று கூறியுள்ளார்.
அதேபோல் திமுக தலைவர் முக ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டரில், ‘இசைப்புயல்
@arrahman அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார். இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! என்று குறிப்பிட்டுள்ளார்