மோசமாக பேசிய சரவணனுக்கு மரியாதை கொடுத்த சேரன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சேரன் மீது கோபம் காட்டி வருபவர் சரவணன். இந்த வாரத்திற்கான ‘ஆட்டம் பாட்டம்’ டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை நடந்தது. அதில் சேரன், சரவணன் முறையாக டாஸ்க்கை செய்யவில்லை என்று தனது கருத்தை கூறினார். இதை கேட்டு டென்ஷனான சரவணன், சேரனை “வாயா” ”போயா” என்று தரக்குறைவாக பேசினார். இதை பார்த்து சேரன் திடுக்கிட்டு போனார். மேலும் கோபத்தை காட்டிய சரவணன், அவரை லூசு
 

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சேரன் மீது கோபம் காட்டி வருபவர் சரவணன்.

இந்த வாரத்திற்கான ‘ஆட்டம் பாட்டம்’ டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக விளையாடியவர்கள் மற்றும் சொதப்பியவர்களை தேர்வு செய்யும் நடைமுறை நடந்தது. அதில் சேரன், சரவணன் முறையாக டாஸ்க்கை செய்யவில்லை என்று தனது கருத்தை கூறினார். 

இதை கேட்டு டென்ஷனான சரவணன், சேரனை “வாயா” ”போயா” என்று தரக்குறைவாக பேசினார். இதை பார்த்து சேரன் திடுக்கிட்டு போனார். மேலும் கோபத்தை காட்டிய சரவணன், அவரை லூசு என்றார். இதில் பொறுமையிழந்தார் சேரன். 

மோசமாக பேசிய சரவணனுக்கு மரியாதை கொடுத்த சேரன்தலைக்கு மீறி ஏறிய கோபத்திலும் ”அண்ணே மரியாதையா பேசுங்கண்ணே” என்ற பண்புடன் தெரிவித்தார். ஆனால் அதற்கும் சரவணன் அடங்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் அங்கே இருக்க முடியாமல் சேரன் வெளியேறிவிட்டார். 

சரவணனின் நடவடிக்கையை பார்த்து தர்ஷனும், மதுமிதாவும் கண்டித்தனர். ஆனால் அதற்கும் விடாமல் சரவணன் பேசிக்கொண்டே இருந்தார்.


இந்நிலையில், சரவணன் தன் மீது ஆத்திரத்தை காட்டிய போதும் அதற்கு கோபம் காட்டாமல் இருந்தார் சேரன். அவற்றைப் பற்றி தவறாகப் பேசாமல், தன்மையாகவே நடந்து கொண்டார்.

From around the web