பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த சேரன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற அனைத்து ப்ரோமோக்களை அடித்து துவைக்கும் அளவு டிஆர்பியைக் கொண்டுள்ளது. 80நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், கவின், லோஸ்லியா, ஷெரின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளிருக்க, சேரன் சீக்ரெட் ரூமிற்குள் உள்ளார். நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா, லோஸ்லியாவிடம் சேரன் கவினிடம் கேட்ட கேள்வி குறித்து கேள்வி கேட்டார். அது தனக்கு மீண்டும் பிரச்சினையை கிளப்பும்படி உள்ளதாகக் கூறினார் லாஸ்லியா. அதன்பின்னர் பிக் பாஸ்
 
பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த சேரன்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற அனைத்து ப்ரோமோக்களை அடித்து துவைக்கும் அளவு டிஆர்பியைக் கொண்டுள்ளது.

80நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், கவின், லோஸ்லியா, ஷெரின், தர்ஷன், முகென், சாண்டி, வனிதா ஆகிய 7 போட்டியாளர்கள் உள்ளிருக்க, சேரன் சீக்ரெட் ரூமிற்குள் உள்ளார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரி கொடுத்த சேரன்!!

நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா, லோஸ்லியாவிடம் சேரன் கவினிடம் கேட்ட கேள்வி குறித்து கேள்வி கேட்டார். அது தனக்கு மீண்டும் பிரச்சினையை கிளப்பும்படி உள்ளதாகக் கூறினார் லாஸ்லியா.

அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லத் தயாரா? என பிக் பாஸ் கேட்க, சேரனும் சம்மதித்தார். சீக்ரெட் ரூமிலிருந்த சேரன் விக்ரம் வேதா பாடல் இசையுடன் மாஸாக எண்ட்ரி கொடுத்தார்.

உள்ளே சேரன் வந்ததும், கவினைத் தவிர்த்து அனைவரும் பிரச்சினைகளை மறந்து மிக மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

ஷெரினும், வனிதாவும் ஓடிவந்து, சேரனை பாசத்தோடு கட்டியணைத்துக் கொண்டனர். தர்ஷன் மகிழ்ச்சியில் சேரனை தூக்கினார். சாண்டியும் மகிழ்ச்சியில் கட்டியணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முகெனின் அம்மா, சகோதரி வந்தது மன நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

From around the web