சாண்டி மற்றும் கவினுக்கு ஆறுதல் சொன்ன சேரன்..!!

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்து இருக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்த போது ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியாகி விட்டனர். சரவணனை அழைத்த பிக்பாஸ், அவர் கல்லூரி காலத்தில் இருந்த போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காகவும், அதை தொலைக்காட்சியில் கூறியதற்காகவும் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார். அவரை கண்ணை கட்டி வெளியே ஒருவர் அழைத்துச் சென்றதாகவும் காட்டப்பட்டது. வெளியே அமர்ந்திருந்த சாண்டிக்கு சித்தப்பு இவ்வளவு
 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிந்து அனைவரும் அமர்ந்து இருக்கையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சரவணன்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அறிவித்த போது ஹவுஸ்மேட்ஸ் அதிர்ச்சியாகி விட்டனர். 


சரவணனை அழைத்த பிக்பாஸ், அவர் கல்லூரி காலத்தில் இருந்த போது பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட காரணத்திற்காகவும், அதை தொலைக்காட்சியில் கூறியதற்காகவும் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார். அவரை கண்ணை கட்டி வெளியே ஒருவர் அழைத்துச் சென்றதாகவும் காட்டப்பட்டது.

வெளியே அமர்ந்திருந்த சாண்டிக்கு சித்தப்பு இவ்வளவு நேரமாகியும் காணவில்லை என்று  எண்ணம் வர கவினிடம் புலம்பத் துவங்குகிறார்.

சாண்டி மற்றும் கவினுக்கு ஆறுதல் சொன்ன சேரன்..!!


 

அது வெளியே இருந்த போட்டியாளர்களிடமும் அறிவிக்கப்பட்டது. இதை கேட்டவுடன் சாண்டி, கவின் மற்றும் மதுமிதா ஆகியோர் கதறி அழுதனர். அதற்கான காரணத்தைச் சொல்லுமாறு அழுதவாறே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டெ இருந்தார் மதுமிதா. அதேபோல சேரனும் கேமரா முன்பு காரணத்தைச் சொல்லுமாறு பிக்பாஸை கேட்டுக்கொண்டே இருந்தார். 

சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவதாகவும் அதன் உண்மையான காரணம் சனிக்கிழமை தெரியவரும் என்று மட்டும் கூறினார் பிக்பாஸ். 

சித்தப்புவுடனே எந்நேரமும் இருக்கும் கவினும், சாண்டியும் கதறி அழுதது பார்வையாளர்களையே உலுக்கும்படியாக இருந்தது.

 

From around the web