ஏஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பிய சென்னை ஐகோர்ட்: என்ன காரணம்?

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 

பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்ததாக சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை அலுவலகம் ஏஆர் ரஹ்மான் மீது குற்றச்சாட்டு ஒன்றை வைத்தது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமான டிரஸ்ட் ஒன்றுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதாகவும் அந்த பணத்திற்கு உரிய வரி செலுத்தப்படவில்லை என்று வருமான வரித் துறையை ரஹ்மான் ஏமாற்றியுள்ளதாக தெரிவித்தது 

ஆனால் ரகுமான் தரப்பில் அந்த பணத்திற்கு 50% வரி ஏற்கனவே செலுத்தப்பட்டது விட்டது என்றும் 4 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த விவகாரத்தை மீண்டும் ஏன் பிரச்சனையாக ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வருமான வரித்துறையினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கில் விளக்கம் அளிக்குமாறு ஏஆர் ரஹ்மானுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இந்த நோட்டீசால் பெறும் பரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web