’மாஸ்டர்’ தடை குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்த சென்னை ஐகோர்ட்!

 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள் மற்றும் செயலிகளில் வெளியிட சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது

ஒவ்வொரு நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அடுத்த நாளே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகி விடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்க வேண்டும் என ’மாஸ்டர்’ படக்குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்

master

இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் ’மாஸ்டர்’ திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட 400 இணையதளங்கள் மற்றும் 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது 

இந்த உத்தரவு ஒவ்வொரு பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும்போது வந்தாலும் அடுத்த நாளே இணையதளங்களில் அந்தப் படங்களை வருவது வழக்கமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web