விஜய் சேதுபதி, நயன், விக்கி உள்பட 10 பேர் என்ன செய்றாங்கன்னு பாருங்க!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பிரபல நடிகை சமந்தா இணைந்தார் என்பதும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது இதில் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா உள்பட மொத்தம் 10 பேர் அமர்ந்து உணவு சாப்பிட்டு வருகின்றனர் இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். படப்பிடிப்பும் அதற்கேற்றவாறு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக இந்த திரைப்படம் மே மாதம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது