சக்தே இந்தியா படத்தின் காப்பியா பிகில்

விஜய் நடிக்கும் படத்தின் பெயர் பிகில் என்று நேற்று அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுவாக அட்லி மீது காப்பி அடிப்பவர் என்ற இமேஜ் ஆழமாக உள்ளது .நேற்று வெளியாகிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட தேவர் மகன் படத்தின் காப்பி என்றும் காலா பட சாயலில் உள்ளது என்றும் பல்வேறு கட்ட விமர்சனங்கள் இணையத்தில் வருகின்றன. சமூக வலைதளங்களிலும் அவை விவாதிக்கப்படுகின்றன. இந்நிலையில் இது ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியா படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில்
 

விஜய் நடிக்கும் படத்தின் பெயர் பிகில் என்று நேற்று அறிவிக்கப்பட்டு விட்டது. பொதுவாக அட்லி மீது காப்பி அடிப்பவர் என்ற இமேஜ் ஆழமாக உள்ளது .நேற்று வெளியாகிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட தேவர் மகன் படத்தின் காப்பி என்றும் காலா பட சாயலில் உள்ளது என்றும் பல்வேறு கட்ட விமர்சனங்கள் இணையத்தில் வருகின்றன. சமூக வலைதளங்களிலும் அவை விவாதிக்கப்படுகின்றன.

சக்தே இந்தியா படத்தின் காப்பியா பிகில்

இந்நிலையில் இது ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியா படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் வைக்கின்றனர். ஷாருக் நடித்த சக்தே ஹாக்கியை மையமாக கொண்ட படம் தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டை பெரும்பாலும் யாரும் விரும்பாத நிலையில் புட்பால் கதையாக மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

சக்தே படத்தில் பெண்ணுக்கு பயிற்சி கொடுக்கும் வலிமை நிறைந்தவராக ஷாருக்கான் நடித்திருப்பார். இப்படத்தில் விஜய்க்கு இன்னொரு விஜய் டிரெய்னிங் கொடுப்பது என கதை நகரும் என தகவல்.

நடிகர் ஷாருக்கானுடன் இயக்குனர் அட்லி நெருக்கம் காட்டி வருவது அனைவரும் அறிந்ததே.

From around the web