வெடி வெடிக்க காத்திருக்கும் வெடி பட நடிகரின் ரசிகர்கள்...!

இந்த மாதம் 19-ம் தேதியில் வெளியாக உள்ளது "சக்ரா" திரைப்படம்....,
 
"மாறா" நடிகையின் ட்விட்டர் பக்கம் கூறும் கருத்து...

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் விஷால்". நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த "சண்டக்கோழி" என்ற திரைப்படம் பயங்கரமாக ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இவர் திமிரு ,வெடி போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "தாமிரபரணி" என்ற திரைப்படம் வேற லெவலாக ஓடி "பிளாக்பஸ்டர் ஹிட்" கொடுத்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "பூஜை" என்ற திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

chakra

தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "சக்ரா". இத்திரைப்படத்தில் இவருடன் "மாறா" திரைப்படத்தின் கதாநாயகியான "சாரதா ஸ்ரீநாத்" நடித்துள்ளார்.சாரதா ஸ்ரீநாத், நடிகர் மாதவனுடன் "விக்ரம் வேதா" என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேலும் இவர் "அல்டிமேட் ஸ்டார்", "தல" என்றழைக்கப்படும் நடிகர் அஜித்துடன் "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் நடிகர் விஷாலுடன் "சக்ரா" என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் இவர்களுடன் பிரபல காமெடி நடிகர் "ரோபோ சங்கர்" நடித்துள்ளார். இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இம்மாதம் 19 ஆம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் நடிகை சாரதா தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் வெளியீடு குறித்த போஸ்டரை  போஸ்ட் செய்து ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்துள்ளார்.

From around the web