ரசிகர்களை தன் குடும்பமாக பார்க்கும் பிரபலம்!

ரசிகர்களுடன் போட்டோ இல்ல! குடும்பத்தோடு போட்டோ! எனக் கூறுகிறார் "பிக்பாஸ் பிரபலம்"
 
ஆரியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் போட்டோஸ்!

தமிழகம் மட்டுமின்றி இந்தி ,தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப்புகழ்பெற்ற நிகழ்ச்சி "பிக்பாஸ்". பிக்பாஸ் தமிழில் 4 சீசன்களை கடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நாயகனாகவும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று டைட்டில் அடித்தவர் பிரபல "நடிகர் ஆரி".

aari

இவர் "நெடுஞ்சாலை" திரைப்படத்தின் கதாநாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் "நாகேஷ் திரையரங்கம்", "உன்னோடு கா" போன்ற படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெற்ற நிலையில் ஆரி தனது ரசிகர்களை சந்தித்து வருகின்றார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ரசிகர்களுடன் எடுத்துள்ள போட்டோ ஒன்று ஷேர்செய்துள்ளார் . மேலும் அவர்,

"ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அல்ல இது...
என் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்", இவ்வாறு கூறுகிறார் நடிகர் ஆரி. இதனால் இவரது ஒவ்வொரு ரசிகர்களும் பெருமை கொண்டும் ஆனந்தத்திலும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவுகிறது. மேலும்  ட்விட்டர் பக்கத்தில் லைக்ஸ்கள் வந்த வண்ணமாகவே உள்ளது.

From around the web