தொழிலதிபருடன் பிரபல பாடகியின் இரண்டாம் திருமணம்: தேதி அறிவிப்பு

பிரபல தெலுங்கு மற்றும் தமிழ் பாடகி சுனிதா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த திருமணத்தின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
இளையராஜா உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடிய பாடகி சுனிதா. 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவுக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சுனிதாவுக்கு ஸ்ரேயா என்ற மகள் உள்ளார் என்பதும் இவரும் ஒரு பாடகி தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விவாகரத்துக்குப் பின்னர் பாடகி சுனிதா தொழிலதிபர் ராம் என்பவரை காதலித்து வந்ததாகவும் விரைவில் இருவருக்கும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது. தொழிலதிபர் ராம் டிஜிட்டல் மீடியா நிறுவனம் ஒன்றின் தலைவராக உள்ளார் என்பதும் அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் சாட்டிலைட் உரிமைகளை பெற்று விற்பனை செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று அதாவது டிசம்பர் 27-ஆம் தேதி ஐதராபாத்தில் ராம் மற்றும் சுனிதா திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென இந்த திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் தற்போது ஜனவரி 9ஆம் தேதி ஹைதராபாத்தில் ராம்-சுனிதா திருமணம் நடைபெற உள்ளதாகவும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் ராம்க்கு திரையுலகில் அதிக நண்பர்கள் இருப்பதால் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது