’தளபதி 65’ படத்தை திடீரென நெருங்கிய பிரபல இயக்குனர்: அப்ப நெல்சன் என்ன ஆச்சு?

 

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகியதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் தான் ’தளபதி 65’ படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன 

sj surya vijay

இந்த நிலையில் தற்போது திடீரென இன்னொரு பிரபல இயக்குனர் ’தளபதி 65’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்தான் எஸ் ஜே சூர்யா. ஏற்கனவே விஜய் நடித்த குஷி என்ற படத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கிய எஸ்ஜே சூர்யா தற்போது ’தளபதி 65’ படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 

விஜய் தரப்பிலிருந்து இதுகுறித்து கேட்டபோது ’தளபதி 65’ படத்தின் இயக்குனர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் முடிவு செய்யப்பட்டதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தளபதி 65 படத்தை இயக்குவது நெல்சனா அல்லது எஸ்ஜே சூர்யாவா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web