"கலைமாமணி" விருது வாங்கும் பிரபல இயக்குனர்!

"கலைமாமணி "விருது வாங்கும் இயக்குனர் "கௌதம் வாசுதேவ் மேனன்"!
 
"லஹரி மியூசிக்" தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும் இந்தத் தகவல்!

நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் "மின்னலே". இத்திரைப்படத்தினை "கௌதம் வாசுதேவ் மேனன்" இயக்கினார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "ஹாரிஸ் ஜெயராஜ்" இசையமைத்தார். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான "காக்க காக்க" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

GVM

மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் "விண்ணைத்தாண்டி வருவாயா" மற்றும் "அச்சம் என்பது மடமையடா". இவ்விரு திரைப்படங்களும் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பையும் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் "தல" என்று அழைக்கப்படும் "அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார்"ஐ கொண்டு "என்னை அறிந்தால்" என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் "எனை நோக்கி பாயும் தோட்டா". மேலும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் "உலகநாயகன்" என்று அழைக்கப்படும் நடிகர் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் "வேட்டையாடு விளையாடு". இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவாக்கி வெளியான திரைப்படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்". இத்திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீசாக நடித்து இருந்தார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று நல்லதொரு வெற்றிப்படமாக அமைந்தது

. இந்நிலையில் "லஹரி மியூசிக்" தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு வாழ்த்துக்கள் கூறி உள்ளது. ஏனென்றால் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் "கலைமாமணி "விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விருது இவரின் திறமைக்கும் ,இவரின் முயற்சிக்கும், இவரின் கடின உழைப்புக்கும் கிடைத்த பரிசாகும் .இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

From around the web