நடிகரின் முன்னாள் மனைவியுடன் கைது செய்யப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்!

 

பிரபல நடிகர் ஒருவரின் முன்னாள் மனைவியுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் மும்பையில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் அவரது மனைவி சுசைனா கான் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இருப்பினும் சமீபத்தில் ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளுடன் சுசைனா கான் முன்னாள் கணவர் கிருத்திக் ரோஷன் வீட்டில் தங்கி இருந்தார் என்றும் செய்திகள் வெளியானது

sussanna khan raina

இந்த நிலையில் மும்பையில் உள்ள இரவு விடுதி ஒன்றில் கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக 34 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் சுசைனா கான் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 

சுசைனா மட்டுமின்றி அதே இரவு கிளப்பில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும்  ஒருவர் என்று தெரியவந்துள்ளது. மேலும் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 

ஒரே கிளப்பில் ஹிரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் கைது செய்யப்பட்டிருப்பது இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web