இன்று இரவு 10 மணிக்கு சூரரை போற்று: ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

 

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் கடந்த மாதமே வெளியாக இருந்த நிலையில் திடீரென இந்திய விமானப் படையிடம் இருந்து வரவேண்டிய தடையில்லாச் சான்றிதழ் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது 

இதனை அடுத்து நவம்பர் 12ஆம் தேதி சூரரைப்போற்று திரைப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரவு இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிகிறது 

soorarai potru 2

இன்று இரவு இந்திய நேரப்படி 10 மணிக்கே ஒருசில நாடுகளில் 12ஆம் தேதி ஆரம்பித்துவிடுவதால் ஓடிடியில் இன்று இரவே வெளியாகும் என்றும் இந்த படத்தை பார்த்த மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது

சூரரைப்போற்று படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அமேசான் பிரைமில்லட்சக்கணக்கான புதிய சந்தாதாரர்கள் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. பொதுவாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் க/பெ ரணசிங்கம் படம் மட்டும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது என்ற நிலையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் முதல் ஓடிடி சூப்பர்ஹிட் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web