படுக்கைக்கு அழைப்பது உண்மைதான்: ரம்யா நம்பீசன்

கடந்த சில மாதங்களாகவே ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் தங்களை பலர் படுக்கைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகையே கதிகலக்கி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி இந்த நிலையில் சினிமாவுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். இந்த பிரச்சனை தனக்கு அதிர்ஷ்டவசமாக நேரவில்லை என்றாலும் தனது தோழிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் சினிமாவில் மட்டுமின்றி எல்லாத்துறையிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றும்,
 

கடந்த சில மாதங்களாகவே ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை நடிகைகள் தங்களை பலர் படுக்கைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகையே கதிகலக்கி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி

இந்த நிலையில் சினிமாவுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மைதான் என்று நடிகை ரம்யா நம்பீசன் கூறியுள்ளார். இந்த பிரச்சனை தனக்கு அதிர்ஷ்டவசமாக நேரவில்லை என்றாலும் தனது தோழிகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சினிமாவில் மட்டுமின்றி எல்லாத்துறையிலும் இந்த பிரச்சனை உள்ளது என்றும், இந்த விஷயத்தில் பெண்கள் தங்களுக்கு நடந்த கொடூரங்களை மூடி மறைக்காமல் வெளியே தைரியமாக கூற வேண்டும் என்றும் ரம்யா நம்பீசன் தெரிவித்துள்ளார்.

From around the web