பணம் கொடுத்தால் வழக்கு வாபஸ்: சென்னை ஐகோர்ட்டில் சூரி பதில் 

 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை நடிகர் சூரியுடன் ரூபாய் 2.7 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வேண்டுமென விஷ்ணு விஷாலின் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றபோது திடீரென நடிகர் விஷ்ணு விஷால் தந்தை ரமேஷ் குடவாலா முன் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார். முன் ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

vishnu soori

இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது ’நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தனக்கு தரவேண்டிய பணத்தை கொடுத்தால் போதும், அவர் மீது நடவடிக்கை தேவை என்பது தனது நோக்கமல்ல’ என நடிகர் சூரி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

இதற்கு விஷ்ணு விஷாலின் தந்தை எடுக்கும் முடிவைப் பொறுத்தே இந்த வழக்கு தொடருமா? அல்லது முடிவுக்கு வருமா? என்பது தெரியும்

From around the web