பிக்பாஸ் தர்ஷன் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்

 

பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் திடீரென கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது தெரிந்ததே. போட்டியில் இருந்து வெளியேறிய பின் அவரது காதலியும் நடிகையுமான சனம்ஷெட்டி திடீரென அவர் மீது புகார் கூறி இருந்தார் என்பதும் இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர் என்பதும் தெரிந்ததே 

தன்னை திருமணம் செய்வதாகவும் திருமண நிச்சயதார்த்தம் செய்துவிட்டு அதன் பின்னர் திருமணம் செய்ய மறுப்பதாகவும் தர்ஷன் மீது சனம்ஷெட்டி புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தொடங்க இருக்கும் நான்காவது சீசனில் சனம்ஷெட்டியும் ஒரு போட்டியாளர் என்ற நிலையில் திடீரென போலீசார் இந்த புகாரின் அடிப்படையில் தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் 

தர்ஷன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளர் மீது பிக்பாஸ் நான்காவது சீசன் போட்டியாளர் கொடுத்த புகாரின் மீது சரியாக இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தினத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web