அந்த கேரக்டரில் இருந்து வெளியே வரவே முடியலை: அரவிந்த்சாமியின் புதிய கெட்டப்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார் என்பதும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடிக்கிறார் என்பதும் தெரிந்தது. ஜெயலலிதா கேரக்டரில் நடிக்கும் கங்கனா கெட்டப் எப்படி இருக்கின்றது தெரியவில்லை. ஆனால் அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே அரவிந்தசாமி இருப்பதாகவும் அவர் அந்த கேரக்டராகவே மாறி விட்டார் என்றும் படக்குழுவினர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே கூறியது
அதற்கேற்றார்போல் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் ஸ்டில்கள் வெளியான போது அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர் என்பதும் எம்ஜிஆரை உயிரோடு எழுந்து வந்து விட்டாரோ என்று எண்ணும் அளவுக்கு அந்த கேரக்டரில் ஒரு உயிர்ப்பு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது தலைவி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து அடுத்த படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றிக்கொண்ட அரவிந்த்சாமி, ‘எம்ஜிஆர் கேரக்டரில் இருந்து வெளியே வரவே முடியவில்லை என்றும் அதற்கு ஓரளவு காலம் தனக்கு தேவை பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளர். மேலும் இந்த புதிய கெட்டப் ‘கள்ளபார்ட்’ என்ற படத்திற்காக என்று கூறி புதிய கெட்டப் கொண்ட புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது