இப்போதைக்கு வர முடியாது: ஷங்கரிடம் கறாராக கூறினாரா கமல்?

 

கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படம் பூஜை போட்டதில் இருந்தே பல்வேறு தடங்கல்கள் வந்தது என்பதும் கிட்டத்தட்ட இரண்டு முறை இந்த படம் டிராப் என செய்திகள் வெளிவந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க ஷங்கர் தயாராக இருந்தாலும் லைக்கா மற்றும் கமல்ஹாசன் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு செய்த செலவுகள் மிக அதிகம் என்பதால் இத்துடன் இந்த படத்தை டிராப் செய்து விடலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து வேறு தயாரிப்பாளர் மூலம் இந்த படத்தை தொடங்க ஷங்கர் முயற்சித்தபோது கமல்ஹாசன் இப்போதைக்கு தன்னால் இந்த படத்திற்கு கால்ஷீட் தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது

பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை முடித்துவிட்டுதான் ’இந்தியன் 2’ படத்திற்கு வரமுடியும் என்று கூறியதாகவும் தெரிகிறது 

இதனால் ஷங்கர் மிகவும் மனம் வருத்தத்தில் இருப்பதாகவும் அவர் வேறு படத்தை இயக்க தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web