கண்கலங்க வைக்கும் பக்ரீத் டீசர்

நடிகர் விக்ராந்த் நடித்த ஆரம்ப கால படங்கள் போதிய வரவேற்பை பெற்றதில்லை. அவர் நடித்த பாண்டியநாடு படத்தில் கதாநாயகன் விஷாலுக்கே சவால் விடும் வகையில் ஆக்சன் வேடத்தில் ஒரு ஆண்மைத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இவரின் சினிமா கிராஃப் ஏறியது. விக்ராந்த் தற்போது பக்ரீத் என்ற படத்தில் நடித்து வருகிறார் முதன் முறையாக ஒட்டகத்தை அடிப்படையாக கொண்ட தமிழ்ப்படம் இது. இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியானது பார்க்கும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாய் உள்ளன. ஒரு ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும்
 

நடிகர் விக்ராந்த் நடித்த ஆரம்ப கால படங்கள் போதிய வரவேற்பை பெற்றதில்லை. அவர் நடித்த பாண்டியநாடு படத்தில் கதாநாயகன் விஷாலுக்கே சவால் விடும் வகையில் ஆக்சன் வேடத்தில் ஒரு ஆண்மைத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் பிறகு இவரின் சினிமா கிராஃப் ஏறியது.

கண்கலங்க வைக்கும் பக்ரீத் டீசர்

விக்ராந்த் தற்போது பக்ரீத் என்ற படத்தில் நடித்து வருகிறார் முதன் முறையாக ஒட்டகத்தை அடிப்படையாக கொண்ட தமிழ்ப்படம் இது.

இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியானது

பார்க்கும் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாய் உள்ளன. ஒரு ஒட்டகத்துக்கும் மனிதனுக்கும் உள்ள பாசமாய் இப்படம் நகர்வதை அந்த ஒட்டகத்துக்கும் ஏற்படும் துன்பங்களை உணர்வுப்பூர்வமாய் சொல்லி இருப்பதாய் டீசர் பார்ப்பவர்களுக்கு தோன்றுகிறது.விக்ராந்துக்கு ஜோடியாக
வசுந்தரா ரோகித் நடித்திருக்கிறார் . ஜெகதீசன் சுப்பு இயக்க டி இமான் இசையமைக்கிறார்.

விரைவில் வெளிவர இருக்கும் இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

From around the web