கால்ஸ் ஆடியோ லான்ச்... கண்ணீர் விட்ட சித்ராவின் அம்மா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். 
 

நடிகை சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படத்தின் ஆடியோ லான்ச்-ல் அவரது பெற்றோர் எமோஷனலாக பேசியுள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இவரது மரணம் தொடர்பாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதனிடையே தற்போது சித்ரா கடைசியாக நடித்துள்ள கால்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் நேற்று வெளியானது. மேலும் இப்படத்தின் ஆடியோ லான்ச்-ம் நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற சித்ராவின் பெற்றோர் எமோஷனலாக பேசினார்கள். மேலும் சித்ரா தனது கனவு நிறைவேறி இருப்பதை பார்க்க இப்போது இல்லையே என அவரது தாயார் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசினார். 

இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சபரீஷ், திரைப்படத்தில் அமைக்கப்பட்ட காட்சி போல, நிஜத்திலும் நடந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதில் உருவாக்கப்பட்ட பாடல் கூட சித்ராவின் மன வலிமையை காட்டும் விதமாக அமைந்திருக்கிறது என தெரிவித்தார். 

From around the web