தம்பி நீங்க உண்மையிலேயே கடவுள்: அனிதா கணவரை கலாய்த்த அர்ச்சனா!

 

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக அனிதா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர் என்பதும் இருவரும் கருத்து வேறுபாடுகளால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் திடீரென தற்போது இருவரும் ஒன்றாகி உள்ளனர். கோழிப்பண்ணை டாஸ்க்கில் இருவரும் இணைந்து விளையாடினார் என்பதும் அதனால் தான் அந்த டாஸ்க்கில் சிறப்பாக விளையாடினார் என்று அனிதா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது

anitha

இந்த நிலையில் இந்தத் டாஸ்க்கிற்கு பின்னர் அனிதாவும் அர்ச்சனாவும் நெருக்கமாகி விட்டார்கள் போல் தெரிகிறது. குறிப்பாக கிச்சன் ஏரியாவில் இருவரும் ஒரே நேரத்தில் இருந்தபோதும் அனிதா கணவர் குறித்து அர்ச்சனா கலாய்த்துக் கொண்டிருந்தார். அனிதாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு கேமரா பக்கம் சென்ற அர்ச்சனா, அனிதா கணவருக்கு கூறுவதுபோல் ’தம்பி நீங்க ரொம்ப திறமையானவர். இப்படி ஒரு வாயாடி பொண்ணு பக்கத்தில் வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் காலத்தை ஓட்டுகிறீர்கள் உங்களுக்கு கோயில் கட்டி தான் கும்பிட வேண்டும்

இந்த 100 நாள் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்த நாள்களாக இருக்கும் ஆனால் அந்த 100 நாள்களில் நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே என்று சொல்லி மாளாது, உண்மையிலேயே நீங்கள் திறமைசாலி தான் என்று அர்ச்சனா அனிதாவின் கணவருக்கு கூறுவது போல் கலாய்க்கிறார் 

அப்போது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அனித சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் அர்ச்சனா சென்றபின் சாரி அப்படி எல்லாம் கிடையாது என்று அனிதா நெகழ்ச்சியாக தனது கணவருக்கு ஒரு மெசேஜை தருகிறார். இந்த காட்சியை நேற்றைய நிகழ்ச்சியில் உள்ள சுவராஸ்யமான காட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது

From around the web