அஜீத்தை பாராட்டிய போனி கபூர்

பிங்க் படத்தின் ரீமேக்காக அப்படத்தின் மையக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழில் உருவாகி வரும் படம் நேர்கொண்ட பார்வை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். தல பிறந்த நாளை ஒட்டி மே 1ல் இப்படம் ரிலீஸ் ஆகும் என முதலில் கூறப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல பாலிவுட்
 

பிங்க் படத்தின் ரீமேக்காக அப்படத்தின் மையக்கதையில் கொஞ்சம் மாற்றம் செய்து தமிழில் உருவாகி வரும் படம் நேர்கொண்ட பார்வை. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச். வினோத் இயக்குகிறார். தல பிறந்த நாளை ஒட்டி மே 1ல் இப்படம் ரிலீஸ் ஆகும் என முதலில் கூறப்பட்டது. தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் படம் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது.

அஜீத்தை பாராட்டிய போனி கபூர்

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் இந்தப் படம் பார்த்த போனி கபூர் ட்விட்டரில், ‘நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தேன். அஜித் மிக அருமையாக நடித்திருக்கிறார். விரைவில் ஹிந்தி படங்களில் நடிக்க ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன். 3 ஆக்‌ஷன் கதைகள் வைத்திருக்கிறேன். அதில் ஒன்றையாவது அவர் தேர்ந்தெடுப்பார் என்று நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.

From around the web