விஜய்யின் வீட்டில் வெடிகுண்டா? மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக புரளி கிளப்பி விடப்பட்ட நிலையில் தற்போது விஜய் வீட்டிலும் அதே போல் வெடிகுண்டை வைத்ததாக புரளி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நேற்று நள்ளிரவில் திடீரென காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் நடிகர் விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டது இதனை அடுத்து விஜய்யின் சாலிகிராமம் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு தீவிர
 

விஜய்யின் வீட்டில் வெடிகுண்டா? மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்ததாக புரளி கிளப்பி விடப்பட்ட நிலையில் தற்போது விஜய் வீட்டிலும் அதே போல் வெடிகுண்டை வைத்ததாக புரளி கிளம்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று நள்ளிரவில் திடீரென காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் நடிகர் விஜய்யின் சாலிகிராமம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு உடனே அழைப்பு துண்டிக்கப்பட்டது

இதனை அடுத்து விஜய்யின் சாலிகிராமம் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு தீவிர சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் அது வழக்கம் போல் வெறும் புரளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து இந்த மர்ம தொலைபேசி அழைப்பு விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்தபோது அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்ததால் அவரையும் அவரது குடும்பத்தினரையும் போலீசார் எச்சரிக்கை செய்தனர்

From around the web