சூர்யாவின் அலுவகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலா? மர்ம தொலைபேசி அழைப்பால் பரபரப்பு

 

கடந்த சில நாட்களாக திரையுலக பிரமுகர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தளபதி விஜய் ஆகியோர்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது என்பதை பார்த்தோம் 

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா அலுவலகத்துக்கு சற்றுமுன் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து சூர்யாவின் அலுவலத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 

ஆனால் சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

From around the web