அஜித் வீட்டிற்கும் வெடிகுண்டு புரளி: கொரோனா விடுமுறையில் எல்லை மீறுவதால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி மற்றும் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அஜித் வீட்டிற்கும் அதேபோன்ற பொய் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சற்றுமுன் போன் மூலம் பேசிய மர்ம நபர் ஒருவர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித்
 

அஜித் வீட்டிற்கும் வெடிகுண்டு புரளி: கொரோனா விடுமுறையில் எல்லை மீறுவதால் பரபரப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினி மற்றும் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம தொலைபேசி மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அஜித் வீட்டிற்கும் அதேபோன்ற பொய் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

தமிழக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சற்றுமுன் போன் மூலம் பேசிய மர்ம நபர் ஒருவர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு உடனே இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சென்றூ சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில் தொலைப்பேசியில் வந்த மிரட்டல் வந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அந்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்ததை அடுத்து விழுப்புரம் அந்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர்.

இந்த கொரோனா விடுமுறையில் பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுவது தொடர்கதையாகி எல்லை மீறி வருவதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது

From around the web