பிரபல நடிகைக்கு இரத்த புற்றுநோய்... சோகத்துடன் பகிர்ந்த நடிகையில் கணவர்....

தனது மனைவிக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் பாலிவுட் நடிகர் பகிர்ந்துள்ளார்.
 
பிரபல நடிகைக்கு இரத்த புற்றுநோய்... சோகத்துடன் பகிர்ந்த நடிகையில் கணவர்....

பாலிவுட்டின் பிரபலமான நடிகர் அனுபம் கேர்.1985ஆம் ஆண்டு நடிகை கிரோன் கேர் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டராகவும் அறியப்படுபவர் இவர்.

இவர் தான் தன்னுடைய மனைவி கிரோன் கேருக்கு மையெலோமா என்கிற கிரோன் கேருக்கு இப்போது ரத்தப்புற்றுநோய் இருப்பதாக தற்போது குறிப்பிட்டுள்ளார்.  கிரோன் கேர் பாலிவுட்டிலும், சின்னத்திரையிலும் மிகப் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர். அத்துடன் வெள்ளித்திரையிலும் 'ரங்க் தே பசந்தி', 'ஃபனா', 'ஓம் ஷாந்தி ஓம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது முதல் திருமணத்தில் இவருக்கு சிகந்தர் என்றொரு மகன் இருக்கிறார். முன்னதாக சண்டிகரிலிருந்து பாஜக எம்.பி.யாகத் தேர்வான கிரோன் கேர், நீண்ட நாட்களாகவே பணியில் ஈடுபடாதது தெரிய வந்தது. இதனை அடுத்து கிரோன் கேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக சண்டிகர் நகரின் பாஜக தலைவர் அருண் சூட் தெரிவித்தார். இப்போது இதனை கிரோன் கேரின் கணவரும் நடிகருமான அனுபம் கேர் உறுதிப் படுத்தியுள்ளார்.

அத்துடன் தான் கடவுளிடம் அதிகமாக கேட்டதில்லை என்றும் கடவுளும் தங்களுக்கு குறை வைத்ததில்லை என்று உருக்கமான, அதே சமயம் நம்பிக்கையூட்டும் ட்வீட்டை இந்த நேரத்தில் அனுபம் கேர் பகிர்ந்துள்ளார். இதனிடையே கிரோனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்காக பிரார்த்திக்கின்றனர். 

From around the web