தனது படத்திற்கு புளூ சட்டை மாறன் என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா?
 

 படத்தில் தலைப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் புளூ சட்டை மாறன். 
 
தனது படத்திற்கு புளூ சட்டை மாறன் என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா?

ஒவ்வொரு புது படம் வெளியாகும் போதும் அந்தப்படத்தைப் பற்றி விமர்சனம் செய்வதில் தனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர் தான் பிரபல விமர்சகரான புளூ சட்டை மாறன். இவருடைய விமர்சனங்கள் ஆரம்பத்தில் இருந்தே மிகவும் ட்ரெண்டான விமர்சனங்கள்.

இதற்கு முக்கியமான காரணம், இவருக்கு என்று இருக்கும் தனிமொழி தான். குறிப்பாக இவருக்கே உரித்தான அந்த ட்ரேட்மார்க் உடையான புளூ சட்டையை அணிந்துகொண்டு எல்லா படங்களையும் இவர் விமர்சனம் செய்து வந்ததால் இவரை புளூ சட்டை மாறன் என்று அனைவரும் அழைக்கத் தொடங்கினர். அவரே தமது ட்விட்டர் பக்கத்தில் புளூ சட்டை மாறன் என்று குறிப்பிட்டிருப்பார்.

ஆனால் புளூ சட்டை மாறன் விமர்சனத்தை பலரும் தொடர்ந்து பார்க்கத் தொடங்கிய பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. அதற்கு நிகராக எதிர்ப்புகளும் இவருக்கு வந்தவண்ணம் இருந்தது. இந்தநிலையில் புளூ சட்டை மாறன் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று பலரும் ஆர்வமாக ஏங்கியது உண்டு. அது தற்போது சாத்தியமாகி இருக்கிறது.

ஆம், விமர்சகர் புளூ சட்டை மாறன் இயக்குநர் ஆகியிருக்கிறார். அவர் ஒரு திரைப்படம் எடுத்து இருக்கிறார். அந்த திரைப்படத்தின் பெயர் ஆன்ட்டி இந்தியன். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் புளூ சட்டை மாறன். அதில், “நான் இயக்கும் திரைப்படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என்று பெயர் சூட்டி உள்ளோம். வரும் வாரம் சென்சார் செய்யப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பலரும் பலவிதமான கமெண்டுகளைக் கொடுத்து வருகின்றனர்.


 

From around the web