விஜய்சேதுபதிக்கு திடீரென ஆதரவு தரும் பாஜக: கட்சியில் இணைவாரா?

 

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ’800’ என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க கூடாது என ஒட்டுமொத்த திரையுலகினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென விஜய் சேதுபதிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்

குறிப்பாக சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு, விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் படத்தில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் ஒரு திரைப்படத்தை திரைப்படமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அதில் அரசியல் கலக்கக்கூடாது என்று தெரிவித்தார் 

அதே போல் ’ஒரு படத்தில் நடிக்கவேண்டும் அல்லது நடிக்கக் கூடாது என்ற முடிவை எடுக்க ஒரு கலைஞனுக்கு உரிமை உண்டு என்றும் அதில் யாரும் தலையிட கூடாது என்றும் பாஜகவின் துணை தமிழக துணை தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்

விஜய் சேதுபதிக்கு கிட்டத்தட்ட ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திடீரென பாஜகவினர் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது ஒருபக்கம் என்ற நிலையில் இந்த படத்திற்காக விஜய் சேதுபதி பாஜகவில் இணையும் வாய்ப்பு இருப்பதாக வதந்தி பரவி வருவது இன்னொரு பக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web