இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு பாஜக எம்பி எச்சரிக்கை: பரபரப்பு தகவல் 

 

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தற்போது ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அவருக்கு பாஜக எம்பி ஒருவர் எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராம் சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இயக்குனர் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது 

இதில் கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வருகிறார். இது குறித்த மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மோஷன் போஸ்டரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது 

சுதந்திரத்திற்காக பாடுபட்ட கொமரம் பீம் அவர்களை ஒரு மதத்திற்குள் அடக்கும் முயற்சியை எஸ்எஸ் ராஜமவுலி செய்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் பாஜக எம்பி சோயம் பாபுராவ் என்பவர் ’படம் எடுத்து பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல்களில் இறங்க வேண்டாம் என எஸ்எஸ் ராஜமவுலி எச்சரிக்கை விடுத்துள்ளார் 

பாஜக எம்பி ஒருவர் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


 

From around the web