பாஜகவை தொடர்ந்து எதிர்க்கும் சித்தார்த்

காந்தி காங்கிரஸ் அல்ல; பாஜக நமது ராணுவம் அல்ல என்று சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து நடிகர் சித்தார்த் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சென்னையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தன் உரையில், “மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார்
 

காந்தி காங்கிரஸ் அல்ல; பாஜக நமது ராணுவம் அல்ல என்று சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் குறித்து நடிகர் சித்தார்த் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

பாஜகவை தொடர்ந்து எதிர்க்கும் சித்தார்த்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களுடைய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இதில் ஒரு பகுதியாக தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சென்னையில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது தன் உரையில், “மத்திய ஆசிய நாடுகளில் தமிழர்கள் சிக்கி இருந்தபோது அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஆப்கானிஸ்தானில் பாதிரியார் பிரேம் சிக்கிய போது அவரை மீட்டோம். அபிநந்தன் 2 நாட்களில் மீட்டோம் என்பது உலகுக்கே தெரியும்” என்று குறிப்பிட்டார்.

மேலும், புல்வாமா தாக்குதல் மற்றும் அபிநந்தன் விவகாரத்தை பாஜக அரசியலாக்குகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சென்னையில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”சுதந்திரத்துக்குப் பிறகு மகாத்மா காந்தியின் விருப்பத்துக்கு மாறாக எப்படி அவரது பெயரை காங்கிரஸ் தனது ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டதோ அதே போல புல்வாமா மற்றும் அபிநந்தன் திரும்பியதை  பாஜக பயன்படுத்திக்கொள்ளும். காந்திஜி காங்கிரஸ் அல்ல. பாஜக நமது ராணுவம் அல்ல. இதை யார் மக்களுக்கு விளக்குவது? இந்தியா பொய்களை எதிர்க்க வேண்டும்”.

இவ்வாறு நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

From around the web