அடுத்தடுத்த நாட்களில் ‘தல’ மனைவிகளின் பிறந்த நாட்கள்!

 

அடுத்த அடுத்த நாட்களில் தல அஜீத்தின் மனைவி ஷாலினிக்கும், தல தோனியின் மனைவி சாக்ஷி தோனிக்கும் பிறந்தநாள் வந்ததை அடுத்து தல ரசிகர்களும் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடி வருகின்றனர் 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான தோனியின் மனைவி சாக்ஷி தோனிக்கு நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

சாக்‌ஷி தோனி தனது32வது பிறந்த நாளை துபாயில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தில் சானியா மிர்சா உள்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ajith dhoni

இந்த நிலையில் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அஜீத்தின் மனைவி ஷாலினிக்கு இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷாலினி அஜீத் தனது வீட்டில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது

தல தோனி மற்றும் தல அஜித் ஆகிய இரண்டு தல மனைவிகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் அடுத்தடுத்த நாட்களில் வந்ததும் அதனை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web