பிரபல நடிகரின் அம்மாவுக்கு பிறந்தநாள்!

பிறந்தநாள் கொண்டாடும்  "நடிகர் ராம் சரணின் தாயார்!"
 
"நடிகர் ராம்சரண்" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரின் தாயார் புகைப்படம்!

தெலுங்கு சினிமாவின் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் ராம் சரண்". நடிகர் ராம்சரண் பிரபல நடிகரான "சிரஞ்சீவி"யின் மகன். ராம் சரண் நடிப்பில் தமிழில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்ற திரைப்படம் "மாவீரன்". இத்திரைப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு பிரபல நடிகை "காஜல் அகர்வால்" ஜோடியாக நடித்திருந்தார். திரைப்படம் "தமிழ்", "தெலுங்கு" என இரு மொழிகளிலும் வெளியாகியது.

ram charan

இத்திரைப்படத்தினை "பாகுபலி" திரைப்படத்தின் இயக்குனர் "ராஜமவுலி" இயக்கினார். மேலும் நடிகர் ராம்சரண் "புரூஸ்லீ 2  தே பைட்டர்","ஆரஞ்சு" போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "ஆர் ஆர் ஆர்".இத்திரைப்படத்தினையும் "பாகுபலி" இயக்குனரான "ராஜமௌலி" இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகி கொண்டு உள்ளது இத்திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயாருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். மேலும் "ராம்சரண்" தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.அந்த புகைப்படம் வைரலாக பரவிகிறது.

From around the web