கறிக்கட்டை முதல் காப்பி அடித்தல் வரை பல பிரச்சினைகளை சந்தித்த பிகில்!!

விஜய் நடிப்பில் அட்லி எடுத்த படம் பிகில், இந்தப் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து கடும் போராட்டங்களை சந்தித்து வெளியானது. ஆரம்பத்தில் இந்தப் படம் என்னுடைய கதை என்று இணை இயக்குனர் ஒருவர் வழக்குத் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர். அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, கறி வெட்டும் கட்டையின்மீது பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கால்
 
கறிக்கட்டை முதல் காப்பி அடித்தல் வரை பல பிரச்சினைகளை சந்தித்த பிகில்!!

விஜய் நடிப்பில் அட்லி எடுத்த படம் பிகில், இந்தப் படம் தீபாவளியை ஒட்டி அக்டோபர் 25 ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்து கடும் போராட்டங்களை சந்தித்து வெளியானது. ஆரம்பத்தில் இந்தப் படம் என்னுடைய கதை என்று இணை இயக்குனர் ஒருவர் வழக்குத் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுவிடுமோ என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

அடுத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, கறி வெட்டும் கட்டையின்மீது பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கால் வைத்திருந்ததை ஒட்டி, கறிக்கடை உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் போராட்டம் செய்தனர்.

கறிக்கட்டை முதல் காப்பி அடித்தல் வரை பல பிரச்சினைகளை சந்தித்த பிகில்!!

எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கறிக்கட்டை கொடுத்து வெள்ளைக் கொடியை நீட்டினர். அப்படா என்பதற்குள் இசை வெளியீட்டு விழாவில் பூ வியாபாரியை பட்டாசுக் கடையில் வேலைக்கு சேர்த்தால் அவர் பட்டாசுக்கு தண்ணீர் தெளித்துவிடுவார் என்று சொல்ல, பூ வியாபாரிகள் அவர்கள் பங்குக்கு கிளம்பி அது போராட்டம் ஆனது.

இவற்றை எல்லாம் முடித்து ரிலீஸ் ஆனால் பிகில் படத்தில் வரும் ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி ஒன்றை அப்படியே பீலே படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியது.

அது மட்டுமல்லாமல் பீலே படத்தின் இசையும் இந்தப் படத்தின் இசையும் ஒரே மாதிரி உள்ளது என்றும் விமர்சித்தனர்.

From around the web