களத்தில் சந்திப்போம் படத்திற்காக ஒன்று சேர்ந்த பிக் பாஸ் பிரபலங்கள்!

முன்னோட்ட காட்சியில் சோம், சுரேஷ் சக்ரவர்த்தி, ரியோ, கேப்ரியல்லா, அனிதா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இணையத்தில் வெளியான இவர்களின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. 

 

பிக்பாஸ் பிரபலங்களின் ரீ யூனியன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 ரசிகர்களின் பேராதரவுடன் சூப்பர் ஹிட் அடித்து நிறைவடைந்துள்ளது. இதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளங்களும் உருவாகின. 

இதனிடையே தற்ப்போது பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்றாக சந்தித்து ஒரு ரீ யூனியன் நடத்தி உள்ளனர். இதற்கு காரணம் ஜீவா நடிப்பில் ரிலீஸ் ஆகியிருக்கும் களத்தில் சந்திப்போம் திரைப்படம்தானாம். 

ஆர்.பி.சவுத்ரியின் தயாரிப்பில் ஜீவா நடித்துள்ள திரைப்படம் களத்தில் சந்திப்போம். இதை தொடர்ந்து ஜித்தன் ரமேஷ் பிக்பாஸ் போட்டியாளர்களை, இப்படத்தின் சிறப்பு முன்னோட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த முன்னோட்ட காட்சியில் சோம், சுரேஷ் சக்ரவர்த்தி, ரியோ, கேப்ரியல்லா, அனிதா, ரேகா, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இணையத்தில் வெளியான இவர்களின் புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது. 

இது ஒருபுறமிருக்க, ஏன் ஆரி, சனம், பாலா ஆகியோர் எல்லாம் இதில் இல்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிசுகிசுத்து வருகின்றனர். 

From around the web