பிக்பாஸ் தமிழ் 4வது சீசன்: அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. பிக்பாஸ் ஆரம்பித்த முதல் நாள் முதல் 100 வது நாள் வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது என்பதும், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்காக பூந்தமல்லி அருகே
 

பிக்பாஸ் தமிழ் 4வது சீசன்: அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. பிக்பாஸ் ஆரம்பித்த முதல் நாள் முதல் 100 வது நாள் வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்தது என்பதும், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இதற்காக பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கமலஹாசனே நான்காவது சீஸனையும் தொகுத்து வழங்கதாகவும் கூறப்பட்டது

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது கசிந்து வந்தன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இன்று இரவு 8 மணிக்கு பிக்பாஸ் நான்காவது சீசன் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விஜய் டிவியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பதை எட்டு மணிவரை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web