சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!!

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர். கமல் ஹாசன் சேரன் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். உடனே, லோஸ்லியா கதறி அழுதார். சேரனின் வெளியேற்றம் குறித்து ஷெரின்,” சார் நீங்க இல்லாம இந்த வீடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, நீங்கள் இருந்ததால்தான் வீடு இவ்வளவு அமைதியாக இருந்தது. நீங்கள் இல்லாமல் இங்கே எப்படி இருப்பது என்று தெரியவில்லை
 
சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!!

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் எவிக்ஷன் பற்றிய பேச்சைத் துவங்கினார். சேரன், கவின், லோஸ்லியா, முகென், ஷெரின் ஆகியோர் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் பட்டியலில் இருந்தனர்.


கமல் ஹாசன் சேரன் வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். உடனே, லோஸ்லியா கதறி அழுதார். சேரனின் வெளியேற்றம் குறித்து ஷெரின்,” சார் நீங்க இல்லாம இந்த வீடு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, நீங்கள் இருந்ததால்தான் வீடு இவ்வளவு அமைதியாக இருந்தது. நீங்கள் இல்லாமல் இங்கே எப்படி இருப்பது என்று தெரியவில்லை என்றார்.

சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!!

சேரன் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வனிதா,“சேரன் வெளியேற்றப்பட்டது தவறு, சேரன் இருக்கும் தைரியத்தில்தான் உள்ளே வந்தேன், உள்ளே ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உள்ளிருக்க சேரனை ஏன் வெளியேற்றினீர்கள்” என்று கேட்டார்.

மிக ஆச்சரியமான விஷயம் யாதெனில், பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்தே, சேரனை எதிரியாக பாவித்துவந்த கவினும், சாண்டியும்கூட சேரன் வெளியேறியது குறித்து வருத்தமடைந்தனர்.

சேரன் வெளியேற்றம் அறிவிக்கப்பட்டபின்னர், பிக் பாஸ் வீடு முழுவதும் அமைதி நிலவியது. இந்தமாதிரியான ஒரு அமைதி இதுவரை யாருடைய வெளியேற்றத்தின்போதும் நிகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web