மீரா மிதுனை அழவைத்த பிக் பாஸ்

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சி வழக்கம் போல் கவின் மற்றும் சாக்ஷி அகர்வாலின் காதல் புரபோஷலுடன் தொடங்கியது. இதில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று சாக்ஷியும், அதே போன்று தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். சிறிது நேரம் கோழி பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதன் பின்னர் சாக்ஷிக்கு முகென் பொட்டு வைத்து கவினை
 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சி வழக்கம் போல் கவின் மற்றும்  சாக்‌ஷி அகர்வாலின் காதல் புரபோஷலுடன் தொடங்கியது. இதில் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று சாக்‌ஷியும், அதே போன்று தனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். 

மீரா மிதுனை அழவைத்த பிக் பாஸ்

சிறிது நேரம் கோழி பிடிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதன் பின்னர் சாக்‌ஷிக்கு முகென் பொட்டு வைத்து கவினை வெற்றுப்பேத்தி பார்த்தார். இந்த நிகழ்வுக்கு கவின் என்ன ரியாக்ஷன் கொடுப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எதுக்கும் அசராமல் இருந்த கவின், சாக்‌ஷின் நெற்றியில் இருந்த பொட்டு-ஐ பார்த்து அழகாக இருக்கிறது என்று கூறியது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. 

அந்த வேளையில், பிக் பாஸே மீரா மிதுனை வெளியேற்றும் பிராங்கை செய்ய சொல்லினார். சாண்டியை அழைத்து பேசிய பிக் பாஸ், மீராவை போட்டியாளர்கள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்து எலிமினேஷன் செய்ய வேண்டும் என்றார். 

அதன்படியே எலிமினேஷன் பிராசஸூம் நடந்தது. அனைவருமே மீரா வந்ததும் தான் பிக் பாஸ் வீட்டில் சண்டை காட்சிகள் அரங்கேறியது என்று காரணம் கூறி எலிமினேட் செய்யக் கூறினர். சரி, அனைவரிடமும் சொல்லிவிட்டு நீங்கள் வெளியேறலாம் என்று பிக் பாஸ் கூற, அப்படியே செய்து கொண்டிருந்த மீரா மிதுனுக்கு கடைசியில் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சாண்டி. இது வெறும் பொய்யான நாடகம் என்று கூறினார். 

From around the web