போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில் பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும். கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்த பின், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் பற்றி பேசினர். ஆசிரியர்கள் அதுகுறித்து கூறும் விதமாக, ஒவ்வொருவருடைய ஆசிரியர் பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது. பலரும் அதனை தொலைபேசி
 
போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில்  பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும்.

கிண்டர் கார்டன் டாஸ்க் முடிவடைந்த பின், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் பற்றி பேசினர். 

போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்த சர்ப்ரைஸ்


ஆசிரியர்கள் அதுகுறித்து கூறும் விதமாக, ஒவ்வொருவருடைய ஆசிரியர் பேசிய ஆடியோ ஒளிபரப்பப்பட்டது. பலரும் அதனை தொலைபேசி இணைப்பாகவே கருதினர், ஆனால் அது ஆடியோ என்பதனை கமல்ஹாசன் சொன்னார்.


கஸ்தூரியின் மகனும் மகளும் பேசியது அனைவர் மனதையும் கரைக்கும்படியாக இருந்தது.  அவருடைய குழந்தைகள் பேசியதும் அவர் கதறி அழத் துவங்கிவிட்டார்.

அடுத்து சேரனிடம் கே.எஸ். ரவிக்குமார் பேசினார், அவரைப் பற்றி சிறப்பாக பேசியதோடு, லாஸ்லியாவையும் சேரனின் மகள் என்றே குறிப்பிட்டுப் பேசினார். சேரனும் இதனை மிக்க நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

சாண்டி, கவின், தர்சன், முகின், லாஸ்லியா, ஷெரின் இவர்களுடைய ஆசிரியர்களும் பேசி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர், வனிதா தன்னுடைய ஆசிரியராக குறிப்பிட்டுப் பேசிய பி.வாசு அவர்களைத் தொடர்புகொள்ள முடியாத காரணத்தினால் பேச வைக்க முடியவில்லை என்று கமல் ஹாசன் கூறினார்.

From around the web