கவின்- லாஸ்லியாவிற்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. வனிதா பிக்பாஸிடம் நியாயம் கேட்டு மைக்கை கழட்டிவிட்டார். அதனையடுத்து லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கிற்காக இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது. இதில் சாண்டி, கவின், முகின், லாஸ்லியா, ஒரு அணியாகவும், ஷெரின், சேரன், தர்ஷன், வனிதா ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர். ஒரு அணியில் லாஸ்லியா குவாலிட்டி செக்கராகவும், மற்றொரு அணியில் வனிதா குவாலிட்டி செக்கராகவும் நியமிக்கப்பட்டனர். வனிதா அணி அதிக
 
கவின்- லாஸ்லியாவிற்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்!!

நேற்றைய நிகழ்ச்சியானது அதற்கு முந்தைய நாள் நிகழ்ச்சியின் நாமினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சண்டையிலிருந்து தொடங்கியது. வனிதா பிக்பாஸிடம் நியாயம் கேட்டு மைக்கை கழட்டிவிட்டார்.

அதனையடுத்து லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் துவங்கியது. இந்த டாஸ்க்கிற்காக இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டது.

கவின்- லாஸ்லியாவிற்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ்!!

இதில் சாண்டி, கவின், முகின், லாஸ்லியா, ஒரு அணியாகவும், ஷெரின், சேரன், தர்ஷன், வனிதா ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர்.  ஒரு அணியில் லாஸ்லியா குவாலிட்டி செக்கராகவும், மற்றொரு அணியில் வனிதா குவாலிட்டி செக்கராகவும் நியமிக்கப்பட்டனர்.

வனிதா அணி அதிக தலையணைகள் செய்தபோதிலும், லாஸ்லியா அதனை நிராகரித்துவிட்டார். இதனால் இரு அணிகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் உருவாகியுள்ளது.

அந்த டாஸ்க் முடிவில் 3 மந்திர பொம்மைகள் கொடுக்கப்பட்டது, அதை பாதுகாக்குமாறு பிக் பாஸ் கூற, பத்திரமாக வைத்திருந்தனர். அதன்பின்னர் அந்த பொம்மைகளை கன்ஃபெஷன் ரூமுக்குள் வைத்தனர்.

அந்த மந்திர பொம்மைகள் கொடுத்த 3 வரங்கள் வெளியே காத்திருக்கிறது என்று கூற, அதனை வெளியே சென்று ஆர்வமாகப் பார்த்தனர். அப்போது அபிராமி, ஷாக்சி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்தனர்.

இது யாருக்கு ஷாக்கோ இல்லையோ கவின்- லாஸ்லியாவிற்கு பயங்கர ஷாக். அய்யய்யோ இனி எப்டி லவ் பண்ணுவது என்பதுபோல ஷாக் ஆகிவிட்டனர்.

From around the web