முதலில் நுழைந்த ஃபாத்திமா பாபுவை முதலாவதாக வெளியேற்றிய பிக் பாஸ்!

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். ஒரு வாரம் கடந்த நிலையில், முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடந்தது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேறப்போவதில்லை என்ற விதியின்படி அவர்கள் நாமினேட் செய்யப்படவில்லை. இவர்களைத் தொடர்ந்து எலிமினேஷன்
 

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் நேற்று ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

ஒரு வாரம் கடந்த நிலையில், முதல் முறையாக இந்த வாரம் எலிமினேஷன் நடந்தது. இதில், ஏற்கனவே கேப்டனாக இருந்த வனிதாவும், தற்போது கேப்டனாக இருக்கும் மோகன் வைத்யா ஆகிய இருவரும் இந்த வாரம் வெளியேறப்போவதில்லை என்ற விதியின்படி அவர்கள் நாமினேட் செய்யப்படவில்லை.

முதலில் நுழைந்த ஃபாத்திமா பாபுவை முதலாவதாக வெளியேற்றிய பிக் பாஸ்!

இவர்களைத் தொடர்ந்து எலிமினேஷன் பட்டியலில் மதுமிதா 6 வாக்குகளும், மீரா மிதுன் 8 வாக்குகளும், சாக்‌ஷி 2, கவின் 2 வாக்குகள், சரவணன் 2 வாக்குகள், சேரன் 2 வாக்குகள் மற்றும் ஃபாத்திமா பாபு 3 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

ஆனால், மக்களின் ஆதரவைப் பொறுத்துத் தான் பட்டியலில் இடம் பெற்றவர்களின் வெளியேற்றம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், மதுமிகாவிற்கு தான் மக்களின் ஆதரவு அதிகளவில் இருந்ததால், இவர் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாக்கப்பட்டார். 

இன்று, கவின் மக்களால் பாதுகாக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, மக்கள் வாக்கை கணக்கில் கொண்டு, மீரா மிதுன் – சரவணன், சேரன் – சாக்‌ஷி பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து எலிமினேஷன் பட்டியலில் எஞ்சியிருந்தது ஃபாத்திமா தான்.
பிக் பாஸ் வீட்டுக்கு உள்ளே செல்லும் முன் கமல் ஹாசன் கொடுத்த வின்னர் கார்டை உடைத்துவிட்டு வெளியே வந்தார் ஃபாத்திமா.

From around the web