பிரியாவிடை பாடலால் பிக் பாஸ் வீட்டிற்குள் கலகலப்பு!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர். டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது. வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல் கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு
 

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.

டி ஆர் பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.

பிரியாவிடை பாடலால் பிக் பாஸ் வீட்டிற்குள் கலகலப்பு!!


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


பின்னர் முக்கிய பகுதியான எலிமினேஷனுக்கு வந்த கமல்ஹாசன் அனைவரையும் கானா பாட்டு மூலம் பிரியாவிடை கொடுக்கும் கவின் மற்றும் சாண்டியிடம் நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு பாடல்கள் பாடுமாறு கூறினார்.

அவர்கள் தாங்கள் தயாரித்த ஆர்டரிலேயே சாக்ஷி, அபிராமி, லோஸ்லியா என மூவருக்கும் பாடல்களைப் பாடினர்.

மூவரும் அப்பாடலை ரசித்துக் கேட்டபடியே, விழுந்து விழுந்து சிரித்தனர். கமலும், பார்வையாளர்களும் எப்போதும்போல ரசித்து மகிழ்ந்தனர்.

From around the web