ரம்யா பாண்டியனிடம் பலிக்காத பிக்பாஸ் தந்திரம்:

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 25 நாட்களாக கலகலப்பாகவும் சில சமயம் ஆத்திரமாகவும் அழுகையும் ஆகவும் சென்று கொண்டிருக்கிறது
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் ஒவ்வொரு போட்டியாளரையும் கன்பெக்சன் அறைக்கு வரவழைத்து அழவைத்து திருப்பி அனுப்பி வருகிறார். போட்டியாளர்களிடம் சென்டிமென்டான கேள்விகள் கேட்டு அவரது குடும்ப உறுப்பினர்களை பாசத்தை தூண்டி விடும் கண்ணீரை வரவழைத்து விட்டார் என்றே கூறலாம்
குறிப்பாக அனிதாவும் அர்ச்சனாவும் கதறி அழுததை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ரம்யா பாண்டியனை அதேபோல் இன்று கன்பெக்சன் அறைக்கு அழைத்தார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் இடம் கேள்வி கேட்பது போல் ரம்யா பாண்டியனிடம் மாற்றி மாற்றி கேள்வி கேட்டும் அவர் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட விழவில்லை என்பதும் குறைந்த பட்சம் அவர் சோகமாக கூட இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
சிரித்துக்கொண்டே எப்படி உள்ளே போனாரோ, அதே போல் சிரித்துக்கொண்டே கன்பெக்சன் அறையிலிருந்து வெளியே வந்தார். இதனை பார்த்த அனிதா, ரம்யாவை செய்தி வாசிப்பது போல் கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்
மற்ற போட்டியாளர்களை அழ வைக்க பிக் பாஸ் செய்த தந்திரம் ரம்யா பாண்டியனிடம் மட்டும் பலிக்கவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
#Day75 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/kgufpS13tc
— Vijay Television (@vijaytelevision) December 18, 2020