பிக்பாஸ் தமிழ்: அனைவரும் எதிர்பார்த்த முதல் போட்டியாளர் அறிமுகம்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பட்டியல்கள் அவ்வப்போது வெளியான நிலையில் இந்த அனைத்து பட்டியலிலும் இடம் பெற்றிருந்தவர் நடிகர் ரியோராஜ் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் முதல் போட்டியாளர் அறிமுகம் செய்யப்பட்டதில் நடிகர் ரியோ ராஜ் பிரம்மாண்டமாக அறிமுகமாகி மேடையில் நடனம் ஆடினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ரியோராஜ்அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்களின் ஆதரவு குவிந்து வருகிறது  

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்திலும், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரியோராஜ் எத்தனை வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடிக்கின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web