பிக்பாஸ் இரண்டாவது போட்டியாளர் சனம்ஷெட்டி: ஆச்சரிய அறிமுகம்!

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளர் சற்றுமுன் ரியோ ராஜ் அறிமுகமாகி அவர் பிக்பாஸ் மேடையில் ஒரு நடன நிகழ்ச்சியை கொடுத்துவிட்டு பிக்பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளார் 

இதனை அடுத்து தற்போது இரண்டாவது போட்டியாளர் அறிமுகமாகியுள்ளார். பலரும் ஏற்கனவே அறிவித்தபடி சனம்ஷெட்டி தான் அந்த இரண்டாவது போட்டியாளர். கடந்த மூன்றாவது சீசனில் போட்டியாளரான தர்ஷனின் காதலியான இவர் அதன்பின் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக சனம்ஷெட்டி வந்துள்ளார். தர்ஷன் மாதிரியே இவரும் கடைசிவரை நிலைத்து நிற்பாரா? அல்லது இடையில் வெளியேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web