இப்படி பத்த வச்சிட்டிங்கிளே பிக்பாஸ்: பாலாஜி-ரியோ மோதல்!

 

இதுவரை பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொளுத்திப் போட்டு சண்டை செய்து கொண்டிருந்த நிலையில் முதல் முறையாக பிக்பாஸ் கொளுத்திப் போட்டதால் பாலாஜி மற்றும் ரியோ இடையே பெரிய சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது 

இன்று நாமினேஷன் படலத்தின் போது காதல் கண்ணை மறைக்கிறது என பாலாஜியை ஆரி கூறியிருந்தார். இதனை நாமினேஷன் படலத்தின் முடிவில் பிக்பாஸ் கூறியதை அடுத்து பாலாஜி பொங்கி எழுந்தார் 

rio balaji fjght

தன்னை யார் ’காதல் கண்ணை மறைக்குது’ என்று கூறியது என்று அவர் ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த வீட்டில் 15 பேர் இருக்கும்போது ஒருவர் மட்டும் தான் அதை கூறியிருப்பார். அவ்வாறு இருக்கும்போது ஒட்டுமொத்த நபர்களையும் சேர்த்து பாலாஜி கூறுவது ரொம்ப தவறு என்றும் பாலாஜி கூறும் அசிங்கமான வார்த்தைகளால் நம் வீட்டில் உள்ளவர்கள் எப்படி பாதிக்கப்படுவார்கள் என்றும் ரியோ வாதாடினார்

இன்னொரு பக்கம் பாலாஜி தனது தரப்பு விளக்கமாக ’நான் ஒன்றும் காதல் செய்வதற்காக இந்த வீட்டிற்கு வரவில்லை. எனக்கு வெளியில் நல்ல பெயர் உள்ளது. காதல் கண்ணை மறைக்கும் அளவுக்கு நான் இல்லை’ என்று ஆவேசமாக பேசுகிறார் 

எனவே விரைவில் ரியோ மற்றும் பாலாஜி இடையே மிகப்பெரிய வாதம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


 

From around the web