பிக்பாஸ் லாஸ்லியா தந்தை காலமானார்; ரசிகர்கள் இரங்கல்!

 

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக இருந்தது மட்டுமின்றி அவர் டைட்டில் பட்டமும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது 

ஆனால் துரதிஷ்டவசமாக கடைசி நேரத்தில் அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும் லாஸ்லியாவுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர் என்பதும் திரையுலகிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதும் தற்போது அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் பிக்பாஸ் கடந்த சீசனில் லாஸ்லியாவை அனைவருக்கும் பிடிக்க முக்கிய காரணம் அவரது குடும்பத்தினர் வருகை. குறிப்பாக அவரது தந்தையும் வருகை. 10 ஆண்டுகளுக்கு மேலாக தந்தையை பார்க்காமல் இருந்த லாஸ்லியா தந்தையை பார்த்து கதறி அழுததும் லாஸ்லியாவை கட்டிப்பிடித்து அவரது தந்தை ஆறுதல் அளித்ததும் மிகப்பெரிய சென்டிமென்ட் காட்சிகள் ஆக இருந்தது 

losliya father

அது மட்டுமின்றி கவின் காதலை கண்டித்து ஒரு தந்தையாக அவர் தனது கடமையை நிறைவேற்றியதால், பார்வையாளர்கள் அனைவருக்கும் லாஸ்லியாவை மிகவும் பிடிக்க ஒரு காரணமாக இருந்தது 

இந்த நிலையில் திடீரென லாஸ்லியாவின் தந்தை காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இதனை லாஸ்லியாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் தந்தை ஆத்மா சாந்தி அடைய அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

From around the web